பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, சீன தூதுவர் செங் ஷியுவான் அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது, சீனா- இலங்கைக்கு இடையில், பொருளாதாரம், சுற்றுலா, கலாசாரம், மற்றும் தீவிரவாத முறியடிப்பு துறைகளில் எவ்வாறு ஒத்துழைத்து செயற்படுவது என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், ஆசிய நாகரீகங்களின் மாநாடு தொடர்பாக பிரதமருக்கு விளக்கமளித்துள்ள சீன தூதுவர்செங், இந்த மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதியும், சீன ஜனாதிபதியும் நடத்திய பேச்சுக்கள் பயனுள்ளவையாக இருந்தன என்றும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய நிலவரங்களை எடுத்துக் கூறிய பிரதமர், இரண்டு நாடுகளும் இணைந்து முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க