உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

ஹேமசிறி, பூஜிதவுக்கு எதிராக சிஐடி விசாரணை

21/4   தாக்குதல்களைத் தடுக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித்  ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமையவே இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தேவாலயங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, முன்னரே வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் விடயத்தில் உயர் அதிகாரிகளாக இருந்த இவர்கள், நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கருத்து தெரிவிக்க