உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேசிய தௌஹீத் மருத்துவர் 4000 பெண்களுக்கு கருத்தடை? காவல்துறைக்கு தெரியாது- சபாநாயகர்

தேசிய தௌஹீத் ஜமாத்தின் உறுப்பினரான மருத்துவர் ஒருவர் சிங்கள பௌத்த பெண்கள் 4ஆயிரம் பேருக்கு கருத்தடை சத்திரசிகிச்சையை மேற்கொண்டதாக கூறப்படு;ம் செய்தியை காவல்துறை அறிந்திருக்கவில்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஸஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள மருத்துவர் ஒருவர் சிங்கள பௌத்த பெண்கள் 4000 பேருக்கு கருத்தடை சத்திரசிகிச்சைகளை நடத்தியுள்ளதாக செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு காவல்துறையையும் அந்த செய்தித்தாள் கோடிட்டிருந்தது
இது தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

“இந்த சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் காவல்துறை இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

செய்தித்தாளின் செய்திப்படி குறித்த மருத்துவர் இதுவரை 7ஆயிரம் கருத்தடை சத்திரசிகிச்சைகளை செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது”

“அப்படியெனில் அவருடைய வயது என்ன என்பதை தெரிந்துக்கொள்ளமுடியவில்லை.”
“இது உண்மையில் மருத்துவத்துறைக்கு பாரிய பிரச்சனையை ஏற்படுத்தும் ஒரு விடயமாக உள்ளது.”

“அத்துடன் இனரீதியாக மருத்துவத்துறையினரை பாதிக்கும் செய்தியாகவும் அமைந்துள்ளது”

எனவே இது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்;தப்படவேண்டும் என்று அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், இந்த செய்தி தொடர்பில் தாம் காவல்துறையினரையும் குற்றப்புலனாய்வுத்துறையினரையும் தொடர்புக்கொண்டு வினவியபோது தாம் இது தொடர்பில்அறிந்திருக்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டதாக தெரிவித்தார்

இந்தநிலையில் குறித்த செய்தித் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க