சினிமா

‘கங்கை அமரன் நடிக்கவில்லை’

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு,  கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ திரைப்படத்தில்  கங்கை அமரன் நடிப்பதாக வெளியான தகவலை வெங்கட் பிரபு நிராகரித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் படத்துக்கு  ‘மாநாடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக  உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் அர்ஜூனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அரசியல் கலந்த இப்படத்தில் கங்கை அமரனும் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே வெங்கட் பிரபு மறுப்பு தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க