உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தீவிரவாதிகளின் தலைவர் ஸஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற ஹன்சார்ட் திணைக்கள அலுவலர் நௌசாத் ஜலால்தீன் இன்று நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
விசாரணைகளின் நிமித்தமே அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது அவர் சுமார் 2 மணித்தியாலங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அத்துடன் அவர் பயன்படுத்திய கணினியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
12 வருடங்களாக நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அவர் மாதாந்தம் 120ஆயிரம் ரூபாவை வேதனமாக பெற்று வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க