உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘ நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவேன்’ – காலக்கெடு விதித்து விமல் சூளுரை

” அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இரண்டு வாரங்களுக்குள் விவாதத்துக்கு எடுப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால்,  மக்களை அணிதிரட்டி  நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவேன். ” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்தால், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவேன் என ஐக்கிய தேசியக்கட்சியிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அறிவித்துள்ளார். அத்துடன், ரிஷாட்டை எதிர்த்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற கவலையில் மேலும் சிலர் இருக்கின்றனர்.

இந்நிலையில், காலத்தை இழுத்தடித்து, பிரச்சினையை திசைதிருப்புவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியால் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. அந்த குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்குரிய திட்டமும் வகுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதுஎப்படியிருந்தபோதிலும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் குறித்த பிரேரணையை விவாதத்துக்கு எடுக்காவிட்டால், மக்களை அணிதிரட்டி நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவேன்.” என்றார் விமல்வீரவன்ச.

 

 

 

 

கருத்து தெரிவிக்க