வவுனியாவில் வெளிநாடடு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும்; உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தை சூழ அதிகளவான இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் புந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் வெளிநாட்டு அகதிகள் சிலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் மதத்தலைவர்கள் மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை தவிர்ந்த ஏனைய நான்கு பிரதேசசபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் சிலரும் பொதுமக்கள் சிலரும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.
இதன்போது வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில்; இருந்து அகற்றவேண்டும் என தீர்மானித்ததுடன் அவர்களை இங்கு தங்கவைத்தமை தொடர்பிலும் கடும் ஆட்சேபனையை வெளியிட்டனர்
அத்துடன் குறிப்பிட்ட தினத்துக்குள், அவர்களை வவுனியாவில் இருந்து வெளியேற்றாவிட்டால் எதிர்ப்பை வெளியிடுவோம் எனவும் தெரிவித்தனர்.
இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பிரதி காவல் மா அதிபர் ஆகியோருக்கு மனுக்களை கையளிப்பது எனவும் பூந்தோட்டத்தில் வெளிநாட்டு அகதிகளை தங்கவைத்துள்ள முகாமுக்கு செல்வது எனவும் தீர்மானித்து மனுவுடன் அரச அதிபர் பணிமனைக்கு சென்றிருந்தனர்.
இதன்போது அரசாங்க அதிபர் இல்லாத காரணத்தினால், மேலதிக அரசாங்க அதிபரிடம் மனுவைக் கையளித்தனர்.
அத்துடன் அகதிகள் தொடுர்பிலும் கேள்வி எழுப்பினர் எனினும் மேலதிக அரசாங்க அதிபர் அகதிகள் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தொடர்பான எந்தவித விடயங்களும் தம்மிடம் இல்லை எனவும் பௌத்த மதகுருமார் அடங்கிய குழுவிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து பிரதி காவல்துறை அதிபரிடம் மனுவைக் கையளிக்க சென்ற போதிலும் அவர் இல்லாத நிலையில் வேறு ஒருவரிடம் அதனைக் கையளித்த பின்னர் பூந்தோட்டம் முகாம் பகுதிக்கு சென்றனர்.
இதன்போது அதிகளவான இராணுவத்தினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்ததுடன் முகாமுக்கு செல்லும் பாதையும் பார ஊர்தியினால் வழிமறிக்கப்பட்டிருந்தது.
;கடும் மழைக்கு மத்தியில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பௌத்த மதகுருமார் மற்றும் குழுவினர் முகாம் பகுதிக்கு செல்ல முற்பட்டபோது காவல்துறையினர் அவர்களை உள் செல்ல முடியாது என தெரிவித்ததுடன் அவர்களை அங்கேயே தடுத்து வைத்தனர்.
இதன்பேது வவுனியா காவல் நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து குழுவினரை செல்ல முடியாது என தெரிவித்தார்
இதனையடுத்து பௌத்த துறவிகள் அடங்கிய குழுவினர் தமது கோரிக்கைக்கு பதில் தராத பட்சத்தில் தம்மாலான நடவடிக்கையை ஓரிரு நாட்களில் எடுப்போம் என தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.
கருத்து தெரிவிக்க