இலங்கை

பொதுத்தேர்தலை நடாத்துவது தொடர்பில் இன்று கலந்துரையாடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

பொதுத் தேர்தல்களை நடத்துவது எப்போது என்பது தொடர்பில் கலந்துரையாட இன்று தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பு நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த எட்டு அடிப்படை உரிமை மீறல்கள் மனுக்கள் விசாரணைகளின்றி தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழு அதிகாரி ரட்ணஜீவன் ஹுல், தேர்தல் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்தே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்பத்திலேயே தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இன்று இக்கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க