உலகம்

ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழக்கும் வைத்தியர்கள்– ரஷ்யாவில் தொடரும் மர்மம்

ரஷ்யாவில் தொடர்ச்சியாக மூன்று வைத்தியர்கள் ஜன்னலில் இருந்து விழுந்துள்ள விடயத்தில் மர்மம் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு மாஸ்கோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த , ரஷ்யாவின் மூத்த பொலிஸ் தடயவியல் நிபுணரான லெப்டினண்ட் கேணல் நற்றாலியா சிஸட்பஹைவா (45) , வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் உள்ள யன்னல் வழியாக விழுந்து உயிரிழந்து விட்டார்.

ஏற்கனவே Dr. யெலனா நீபொம்ன்சாயா (47) என்பவரும் , Dr. நற்றல்யா லெபாட் (48) என்பவரும் ,வைத்தியசாலை யன்னல் வழியாக விழுந்து உயிரிழந்து உள்ளனர்.

தற்போது Dr. அலெக்ஸாண்டர் ஸல்பௌ (37) என்ற வைத்தியர் வைத்தியசாலையின் இரண்டாவது யன்னல் வழியாக விழுந்து, தலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதோடு தனக்கு கொரோனா தொற்றுள்ள நிலையிலும் வேலையை தொடரும்படி நிர்வாகம் வற்புறுத்தியதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவருடைய நண்பர் ஒருவர் அலெக்ஸாண்டர் தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை அல்ல எனவும், இதில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதும் மர்மத்தை அதிகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க