கடந்த மார்ச் 27ம் திகதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இணை சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட மாணவ சங்கத்தினர் 27 பேர் சுகாதார அமைச்சிற்கு முன் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனரென கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதற்கிணங்க நேற்று (மார்ச் 28), கைது செய்யப்பட்ட 27 பேரில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க