எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, கொழும்பு நகரிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று காலை கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், பாதுகாப்பு நிலைவரம் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
பாடசாலை வளாகத்திலிருந்த பெற்றோரையும் சந்தித்தார். மாணவர்கள் பலரும் மஹிந்த ராஜபக்சவின் பாதங்களை தொட்டு வணங்கி ஆசிபெற்றனர். மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பலரும் அவரை, ‘ஜனாதிபதி’ என்றே விளித்தனர்.
முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன உட்பட மேலும் சில கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த கண்காணிப்பு பயணத்தில் மஹிந்தவுடன் இணைந்துகொண்டனர்.
கருத்து தெரிவிக்க