பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான முக்கியத்துமிக்க சந்திப்பொன்று இவ்வாரம் நடைபெறவுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
சர்வதேச தரத்திலான புதிய ‘பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தை’ சபையில் நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் அவசியமில்லை என்றும் நடைமுறையிலுள்ள சட்டமே போதுமானது என்றும் ஐ.தே.கவின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித்தின் இந்த அறிவிப்பானது தெற்கு அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரை நேரில் சந்தித்து, விளக்கமளிப்பதற்கு கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க