பாதுகாப்பு உடன்படிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில், சீனா தனது புலனாய்வு சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது.
” இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு உடன்படிக்கையில், பாதுகாப்புக் கருவிகள் விநியோகம், இராணுவத்தினருக்கான பயிற்சிகள் போன்ற அடிப்படை காரணிகளை மாத்திரமே உள்ளடங்கியுள்ளன.” என்று சீன தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் பயணமாக கடந்த வாரம் சீனாவுக்குச் சென்றிருந்தார். அத்துடன், உயர்மட்ட சந்திப்புகளையும் நடத்தினார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.
இதன்பிரகாரம், இலங்கையில், சீனா தனது புலனாய்வு சேவையை ஆரம்பிக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க