உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்வணிக செய்திகள்

ஹிஸ்புல்லாவுக்கு கடிவாளம்! ஜனாதிபதி அதிரடி வியூகம்

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை உடன் இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றிரவு நேரில் சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகனிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் ,

” மட்டக்களப்பு மாவட்டத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர்கள்,  பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்குகூட தெரியப்படுத்தாமல்,  தன்னிச்சையான முறையில் சுமார் 267 முஸ்லிம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார் கிழக்கு மாகாண ஆளுநர். குறிப்பாக இதில் 150 பேருக்கு கடந்த நான்கு, ஐந்து நாட்களுக்குள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தை நேற்றைய சந்திப்பின்போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தேன். இதையடுத்து தனது செயலாளர் ஊடாக கிழக்கு ஆளுநருக்கு அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி,  ஆசிரியர் இடமாற்றங்களை உடன் இரத்து செய்யுமாறு பணிப்புரை விடுத்தார்.” என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் ஜனாதிபதி நேற்றிரவு சந்தித்தார். இதன்ஓர் அங்கமாகவே வியாழேந்திரனுடனான சந்திப்பும் நடைபெற்றது.

 

 

கருத்து தெரிவிக்க