பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படுவார் என்று பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
” ஞானசா தேரரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தேரருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனவே, ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் ஞானசார தேரரை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அவர் விடுதலை செய்வார் என நம்புகின்றோம். அதற்கான ஆவணங்களை தயார்படுத்தும் பணியில் ஜனாதிபதி செயலகம் ஈடுபட்டுள்ளது என தெரியவருகின்றது.
ஞானசார தேரர் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் குரல் எழுப்பியதாலேயே இன்று சிறைவாசம் அனுபவிக்கின்றார். எனவே, மக்களும் அவருக்காக குரல்கொடுக்க வேண்டும்.” என்றும் பொதுபல சேனாவினர் கோரிக்கை விடுத்தனர்.
கருத்து தெரிவிக்க