உள்நாட்டு செய்திகள்

சஹ்ரான் குழு ஊழித்தாண்டவம் – இன்றுடன் ஒருமாதம் பூர்த்தி!

21/4 தாக்குதலின் ஒரு மாதப் பூர்த்தியை முன்னிட்டு வடக்கில் இன்று சகல வழிபாட்டு தலங்களிலும் மணி ஒலி எழுப்பி அஞ்சலி செலுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி காலை 8.45 மணிக்கு வடக்கு மாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்கச் செய்வதுடன், ஒரு நிமிடம் மௌன அஞ்சலி  செலுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென கோரியும் நாட்டின் ஏனையப் பகுதிகளிலும் இன்று ஆன்மீக வழிபாடுகளும், அஞ்சலி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு,  மட்டக்களப்பு,  நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும்,  கொழும்பில் ஆடம்பர விடுதிகளிலும்,  சஹ்ரான் குழுவினரால் ஏப்ரல் 21இல் நடத்தப்பட்ட  தற்கொலை குண்டு தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.  அத்துடன்,  500 பேர் காயமடைந்தனர்.

கருத்து தெரிவிக்க