2020ஆம் ஆண்டு ஜூன் வரையில் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கான முனைப்புக்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இதன்கீழ் சட்டமா அதிபர் திணைக்களம். ஜனாதிபதியின் சார்பில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோருவதற்கான ஆவணத் தயாரிப்புப் பணிகளை நிறைவுசெய்துள்ளது.
இந்தநிலையில் விரைவில் இந்த சட்டவிளக்கம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்ற ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பருடன் முடிவடைகின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தல்; இந்த வருட இறுதியில் நடத்தப்படவேண்டும்.
எனினும் சட்டங்களைச் சுட்டிக்காட்டி அதனை 2020 ஜூன் வரையில் பிற்போட முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனையடிப்படையில் புதிய பிரதமநீதியரசர் நியமிக்கப்பட்டவுடன் இதற்கான விளக்கம் கோரப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க