நேற்று (பெப்ரவரி 21) ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்த மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை அவதானித்த ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் அவர்களை மீட்டு பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரெனவும் உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் சடலம் பலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க