இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

நேற்று (பெப்ரவரி 09) சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபரின் பொதியிலிருந்து 30 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் அடங்கிய 150 சிகரெட் காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 13ம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க