இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இரு தமிழக படகோட்டிகளுக்கு தண்டப்பணம் விதிப்பு

கடந்த மாதம் (பெப்ரவரி) 20ம் திகதி இரு படகுகளில் யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இரு படகோட்டிகள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று (மார்ச் 19) விசாரணைக்கு எடுக்கப்பட்ட குறித்த வழக்கில் இரு படகுகளை செலுத்திய இரு படகோட்டிகளுக்கும் தலா 04 மில்லியன் தண்டப்பணமும் 06 மாத கால சிறைதண்டணையும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க