இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் ஸ்தம்பிதநிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளே இதற்கு காரணம் என்று பாகிஸ்தானியச் செய்தித்தளம் ஒன்று கூறுகிறது.
இதன்கீழ் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசி மற்றும் ஆடைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உருளைக்கிழங்கு ஏற்றுமதி குறைக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான்- இலங்கை வர்த்தகப் பேரவைத் தலைவர் அஸ்லாம் பக்ஹலி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் வர்த்தகர்களே பாகிஸ்தானில் இருந்து இந்தப்பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறார்கள்.
இந்தநிலையில் அவர்களுக்கு எதிரான வன்முறைக் காரணமாக பாகிஸ்தானின் ஏற்றுமதிகள் குறைந்துள்ளன.
இலங்கையில் முஸ்லிம்களின் வியாபாரத்தளங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள் என்பன தாக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சுமார் 500 மில்லியன் டொலர்கள் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தானிய ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கை முஸ்லிம் வர்த்தகர்கள் செலுத்தவேண்டிய 30 மில்லியன் டொலர்கள் நிலுவையாக உள்ளன என்றும் இலங்கை வர்த்தகப் பேரவைத் தலைவர் அஸ்லாம் பக்ஹலி சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க