உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்

ஐ.தே.கவுடன் இணைந்து இடைக்கால அரசா?அடியோடு நிராகரிக்கிறது சு.க.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து,  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளது என வெளியாகியுள்ள தகவல்களை சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களுள் ஒருவரான மஹிந்த அமரவீர இன்று நிராகரித்தார்.

அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் மஹாநாயக்க தேரர்களின் ஆலோசனையின் பிரகாரமே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

” ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைப்பதற்கு எமது கட்சி எதிர்பார்க்கவில்லை. பிரதான எதிர்க்கட்சிக்குரிய வகிபாகத்தை சிறப்பாக செயற்படுத்துவதே எமது இலக்காகும்.

அத்துடன், குற்றவாளிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திரக்கட்சி பாதுகாக்காது.  எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்காக கட்சியின் நாடாளுமன்றக்குழுவும், மத்திய செயற்குழுவும் விரைவில் கூடி முடிவுகளை எடுக்கவுள்ளன.

அரசியல் தீர்மானம் என்பதற்கு அப்பால் இது விடயம் குறித்து மஹாநாயக்க தேரர்களினதும், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆலோசனையின் பிரகாரமே முடிவுகளை எடுப்போம்.” என்றார்.

 

 

 

கருத்து தெரிவிக்க