உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஆட்சியைக் கவிழ்க்க நாளை பிரேரணை

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர்  கருஜயசூரியவிடம் நாளை கையளிக்கப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

” பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் என புலனாய்வுப்பிரிவினர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தனர். வெளிநாட்டு அமைப்புகளாலும்  தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு  உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இதற்கு அரசாங்கம்  பொறுப்புகூற வேண்டும்.

அதேபோல் மே -13 ஆம் திகதி நடைபெற்ற வன்முறைகளையடுத்து அரசாங்கத்தின் நிர்வாகப் பொறிமுறையும் தோல்வி கண்டுள்ளது என்பது உறுதியாகிவிட்டது.  இந்த நாட்டை ஆள்வதற்கான உரிமையை,  தகுதியை   அரசாங்கம்  இழந்துவிட்டது. எனவே,  அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக  நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.  அது நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.

இதற்கு ஆதரவு வழங்குமாறு அனைத்து கட்சிகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றும் அநுர குமார சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க