ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.
இதன்போது உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில்- ஐ.தே.க. அமைச்சர்களுக்கும், ஜனாதிபதிக்குமிடையில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அனைத்துலக தரத்தில் புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அதி உயர் சபையாக கருதப்படுகின்ற நாடாளுமன்றம் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இதன்போதும் முக்கிய சில விவகாரங்கள் குறித்து ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கிடையில் கடும் சொற் சமர் இடம்பெறவுள்ளது.
கருத்து தெரிவிக்க