சினிமா

அன்பு மழை பொழியும் காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஜெயம்ரவியுடன் ‘கோமாளி’ படத்திலும் நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் ‘இந்தியன்–2’ படத்துக்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர். சினிமா வாழ்க்கை குறித்து காஜல் அகர்வால் வழங்கிய நேர்காணலில்,
‘‘நான் 15 ஆண்டுகளாக நடித்துகொண்டு இருக்கிறேன். இவ்வளவு நீண்ட எனது சினிமா பயணத்தில் நான் நடித்த கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் எனது மனதை தொட்டு இருக்கின்றன. கதை கேட்கும்போதே அந்த கதாபாத்திரத்தில் என்னை நான் கற்பனை செய்து பார்த்துக்கொள்வேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் புதிய வாழ்க்கையை அனுபவித்ததுபோல் செய்தது.
எனது மனது மென்மையானது. கோபம் சீக்கிரம் வந்து விடும். அன்பும் அதிகமாக காட்டுவேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.’’ – என்று கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க