சீனாவின் புலனாய்வுப் பிரிவினர் இலங்கையில் செயற்படுவதாக நம்பப்படுகிறது.
ராஜதந்திர தரப்புக்களின் தகவல்படி, இலங்கையின் அனுமதியுடன் அலலது அனுமதியில்லாமல் இந்த புலனாய்வுப்பிரிவினர் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையி;ல் சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் நிர்மாணத்திட்டங்களின் ஊடாக இந்த சீன புலனாய்வாளர்கள் நாட்டுக்குள் வந்திருக்கலாம் என்ற கருதப்படுகிறது.
இதேவேளை சீனாவிடம் இருந்த இணைய கண்காணிப்பு திட்டங்களை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணையங்களின் ஊடாக சமூகங்களுக்கு இடையில் பதற்றம் தோற்றுவிக்கப்படுவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெ சண்டே மோர்னிங் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக சீனாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மைத்ரிபால சீனாவுக்கு சென்றிருந்தபோது சீன ஜனாதிபதியினால் இதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டது.
சுமார் 5 பில்லியன் ரூபா பெறுமதியான இராணுவத்தை மையமாகக்கொண்ட தொழில்நுட்ப கண்காணிப்பு கருவிகளை வழங்கவும் சீனா உறுதியளித்தது.
கருத்து தெரிவிக்க