சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்திய பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக முன்னிலை

இந்திய பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் கருத்துக்கணிப்புக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

மீண்டு;ம் நரேந்திரமோடி ஆட்சியமைப்பார் என்றும் ராகுல் காந்திக்கு வாய்ப்பிருப்பதாகவும் அந்தக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

இந்தவகையில் ராஜஸ்தான் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பின்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 23 முதல் 25 இடங்களில் வெல்லும் என இந்தியா டுடே – ஏக்சிஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது.

நியூஸ் 18 – ஐ.பி.எஸ்.ஓ.எஸ் கருத்துக்கணிப்பு பாஜக 22-23 இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு முதல் மூன்று இடங்களிலும் வெல்லும்.

டுடேஸ் சாணக்யா – நியூஸ் 24 கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி 336 முதல் 364 இடங்களிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 86 முதல் 104 இடங்களிலும் வெல்லும்

காங்கிரஸ் 46 முதல் 64 இடங்களிலும், பாஜக 286 முதல் 314 இடங்களிலும் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் 38 இடங்கள், சமாஜ்வாதி கட்சி 10 இடங்கள், பகுஜன் சமாஜ் கட்சி ஏழு இடங்கள் இடதுசாரிகள் 12 இடங்கள் உள்பட பிற கட்சிகள் 124 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில முடிவுகளின்படி குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளில் 25 முதல் 26 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்றும் அதிகபட்சம் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெல்லும் என்றும் இந்தியா டுடே – ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

கேரள மாநில முடிவுகளின்படி,காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் 15 முதல் 16 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி மூன்று முதல் ஐந்து இடங்களிலும் வெல்லும் என்கிறது இந்தியா டுடே –
பாஜக அங்கு அதிகபட்சம் ஒரு தொகுதியில் வெல்ல வாய்ப்புள்ளதாக இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

ரிபப்ளிக் – சி வோட்டர் கருத்துக்கணிப்பு, கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதிகளை கைப்பற்றுமென்றும், பா.ஜ.க கூட்டணி ஒரு தொகுதியிலும் வெல்லாது என்றும் கூறுகிறது.

ஆந்திரப் பிரதேச முடிவுகளின்படி ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் நான்கு முதல் ஆறு இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 18 முதல் 20 இடங்களிலும் வெல்லும்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் எட்டு முதல் ஒன்பது தொகுதிகளிலும் பாஜக கூட்டணி மூன்று முதல் ஐந்து இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்திலும் வெல்லும் என இந்தியா டுடே – ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாஜக இரண்டு முதல் மூன்று இடங்களிலும், தேசிய மாநாட்டுக் கட்சி இரண்டு முதல் மூன்று இடங்களிலும், காங்கிரஸ் அதிகபட்சம் ஓரிடத்திலும் வெல்லும் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

தமிழக இடைத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு நடந்துள்ள சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக 20 முதல் 22 இடங்களில் வெல்லும்.

அதிமுக அதிகபட்சம் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வெல்லும் என்று இந்தியா டுடே கூறுகிறது.

கருத்து தெரிவிக்க