நேற்று (டிசம்பர் 31) கம்பஹா வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தின் பழைய பொருட்கள் மற்றும் புத்தகங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த அறை தீவிபத்தில் முற்றாக எரிந்து தீக்கிரையானதில் பழைய முறைப்பாட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளம் ஆவணங்கள் தீயில் எரிந்து அழிந்து போயுள்ளன.
அத்தோடு இத்தீவிபத்து காரணமாக வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, சமூக பொலிஸ் பிரிவு ஆகிய அறைகளும் சிறு அளவில் சேதமடைந்துள்ளனவென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க