உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜெர்மனின் பாராளுமன்ற தேர்தல் திகதியை அறிவித்த ஜனாதிபதி

ஜெர்மனியில் சான்சலர் ஒலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான ஆளும் கட்சி, இம்மாத (டிசம்பர்) ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நிலையில் தற்போது ஜெர்மனின் பாராளுமன்றம் அந்நாட்டு ஜனாதிபதியான பிராங்க் வால்டர் ஸ்ரீமியரால் கலைக்கப்பட்டுள்ளதோடு பாராளுமன்ற தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க ஜெர்மன் நாட்டின் பாராளுமன்ற தேர்தலானது எதிர்வரும் பெப்ரவரி 23ம் திகதி நடைபெறுமென ஜெர்மன் நாட்டின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்ரீமியர் அறிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க