பரசுராம்,சகுனி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனரான சங்கர் தயாள் தற்போது குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்ற திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் சங்கர் தயாள் சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 19) தனது 54வது வயதில் காலமானார்.
இந்நிலையில் அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க