உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சரத் பொன்சேகாவின் அமைச்சு: ஜனாதிபதியுடன் மீண்டும் முறுகல் ஏற்படுமா?

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சராக நியமிக்கக்கோரி ஐக்கிய தேசிய முன்னணி மனு ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்த மனு கையளிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷ_ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மனுவில் 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

தற்காக ஜனாதிபதியிடம் சிறப்பு அனுமதி பெறப்படவில்லை.

எனினும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த மனுவைக் கையளிக்க எதிர்பார்ப்பதாக ஆஷ_ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தப்படி ஜனாதிபதி, காவல்துறை திணைக்களத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருக்கமுடியாது என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் நிலைப்பாடாக உள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் நிலைப்பாடு அரசாங்கத்துக்குள் மீண்டும் முரண்பாடுகளை ஏற்படுத்துமா? என்பதை அரசியல் தரப்புக்கள் எதிர்பார்க்கின்றன.

கருத்து தெரிவிக்க