இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட லொஹான் ரத்வத்த

நேற்று (டிசம்பர் 06) மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்தியதன் காரணமாக கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (டிசம்பர் 07) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார்.

அதற்கிணங்க கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் டிசம்பர் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க