இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்ற ஜனாதிபதி

நேற்று (டிசம்பர் 05) டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றியிருந்தார்.

அதற்கிணங்க அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில் நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில் வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

மேலும் வறுமையை ஒழித்தல், சமூக மனப்பாங்குகளை மாற்றுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

கருத்து தெரிவிக்க