உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 2023 – 2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நவம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கடந்த நவம்பர் 23ம் திகதியிலிருந்து நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வரி செலுத்துவோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர்கள் வரி விபரத்திரட்டை சமர்ப்பிப்பதில் சிரமங்களை எதிர்க்கொண்டமையால் குறித்த வரி விபரத்திரட்டை சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் டிசம்பர் 07ம் திகதி அல்லது அதற்கு முன்னர் வரை மேலதிக கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க