இன்று (டிசம்பர் 03) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் குறித்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க 2023ம் ஆண்டில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காகக் கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கும் புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலமொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க