இன்று (நவம்பர் 18) புதிய அரசாங்க அமைச்சரவையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
அதற்கிணங்க நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராக சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரியவும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத்தும் பொது நிர்வாக, மாகாண சபை , உள்ளூராட்சி அமைச்சராக சந்தன அபேரத்னவும் நீதி மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சராக ஹர்ஷன நாணயக்கார பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
அத்தோடு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜூம் கமத்தொழில்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சராக லால் காந்தவும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே பதவியேற்றுள்ளனர்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துநெத்தியும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபாலவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிமல் ரத்நாயக்கவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக ஹினிதும சுனில் செனவியும் சுகாதாரம், வெகுசன ஊடக அமைச்சராக நலிந்த ஜயதிஸ்ஸவும்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவியேற்றுள்ளனர்.
மேலும் விளையாட்டு, இளைஞர் விவகார
அமைச்சராக சுனில் குமார கமகேவும் வர்த்தக,வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுஅபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்கவும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கிருஷாந்த சில்வா அபேசேனவும் வலுசக்தி அமைச்சராக குமார ஜயகொடியும் சுற்றாடல் அமைச்சராக தம்மிக்க பட்டபெந்தியும் தொழில் அமைச்சராக அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
கருத்து தெரிவிக்க