கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதற்கிணங்க ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளைத் தளர்த்தியுள்ளதாகவும் ஆரோக்கியமான விலங்குகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இவ் வாரத்திற்குள் நோய் பரவல் ஓரளவு குறையுமெனவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க