புதியவைவணிக செய்திகள்

அரிசி விலை தொடர்பில் கருத்து

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.எல்.ரந்திக நெல் கொள்வனவு விடயத்தில் அரசாங்கத்தின் குறைந்தபட்ச தலையீடுகளே அரிசியின் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதாகவும் இதன் காரணமாக சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு விலை உயர்வால் நுகர்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனரென தெரிவித்துள்ளார்.

மேலும் 2024ம் ஆண்டு யால மற்றும் மஹா பருவத்தில் அரிசி உபரியாக காணப்படும் பின்னணியில் அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லையென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க