உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
‘ ஸ்டான்ட் பை’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பொப் பாடகி லோரின் பாடியிருக்கிறார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட் டொப், லாரின் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலக கிண்ண கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் , நியூசிலாந்து, இலங்கை, பங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க