கடந்த அக்டோபர் 26ம் திகதி இலக்க தகடற்ற சொகுசு ரக வாகனமொன்று மிரிஹானையிலுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மனைவியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதற்கமைய லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.
இதன்போது கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் மிரிஹானை காவல்துறையினர் சமர்ப்பணங்களை முன்வைத்ததோடு நேற்று நுகேகொடை மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதற்கிணங்க கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் நவம்பர் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க