இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

எரிபொருள் விலை திருத்தம் குறித்து சினோபெக் நிறுவனம் கருத்து

நேற்று (அக்டோபர் 31) முதல் அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவனம் தன் எரிபொருள் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

அதன்படி ஒரு லீட்டர் ஒட்டேன் 95 ரக பெற்றோலின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 371ரூபாவாகும். 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 311 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் லங்கா சுப்பர் டீசல் 22 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 313 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 283 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க