பல கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாக நேற்று (அக்டோபர் 30) மாலை 4.30 மணி முதல் பயணச்சீட்டு விநியோக நடவடிக்கைகளிலிருந்து விலகவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
இருப்பினும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று (அக்டோபர் 30) நள்ளிரவுடன் தன் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்சய ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க