அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (அக்டோபர் 24) நெல்லியடி பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து நெல்லியடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதோடு காவல்துறையினரால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க