இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2012ம் ஆண்டில் கிரேக்கம் பாரிய நெருக்கடியை சந்தித்திருந்த வேளையில் இலங்கையின் மத்திய மாபெரும் தொகையை கிரேக்க மத்திய வங்கியின் பிணைமுறிகளில் முதலீடு செய்திருந்தமையால் இலங்கைக்கு 1.8 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதோடு அதன் நேரடித்தலையீட்டை அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட ஐவர் மேற்கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

அதற்கிணங்க இன்று (அக்டோபர் 10) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின் பிரதிவாதிகளில் ஒருவரை தலா 10 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க