நேற்று (அக்டோபர் 06) குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கம்பஹா ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல அவிசாவளை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றை சுற்றிவளைத்த போது இணையத்தளத்தில் திட்டமிட்டு பண மோசடியில் ஈடுபட்ட பல வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கிணங்க கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜைகளிடமிருந்து நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 499 கையடக்க தொலைபேசிகள், 24 மடிக்கணினிகள் மற்றும் 29 டெஸ்டொப்கள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சர்வதேச பொலிஸ் மற்றும் யூரோபோல் ஆதரவுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க