சினிமாசினிமாபுதியவை

மெய்யழகன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

பிரேம் குமார் இயக்கத்தில் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண்,அரவிந்த்சாமி,தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் என பலரின் நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ம் திகதி வெளியாகியிருந்தது.

மெய்யழகன் திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தாலும் திரைப்படமானது நீளம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியமையால் திரைப்படத்தின் நீளத்தை குறைக்க மெய்யழகன் திரைப்படக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க படத்திலிருந்து 18 நிமிடங்கள் 42 வினாடிகள் நீக்கப்பட்டு 2 மணி 38 நிமிடங்களாக வரையறுக்கப்பட்டு திரையிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க