மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் நேற்று (செப்டம்பர் 30) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கிணங்க 332 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீட்டர் 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 311 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 307 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீட்டர் ஓட்டோ டீசல் 24 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 352 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீட்டர் லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் 33 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 319 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 202 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 183 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலையில் மாற்றம் ஏற்படவில்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க