இதழ்கள்உள்நாட்டு செய்திகள்

‘போர் வெற்றியை கண்டியில் கொண்டாடுகிறது கூட்டு எதிரணி’

உள்நாட்டுப்போர் முடிவடைந்து நாளையுடன் (18) 10 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு 19 ஆம் திகதி தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வுகளை அரசாங்கம் நடத்தவுள்ளது.

பிரதான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்,  பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ வீரர் நினைவுத் தூபிக்கு அருகில்  நடைபெறும். இதில் படையினரின் குடும்பத்தினரும் பங்கேற்கவுள்ளனர்.

 

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணி நாளை போர்வெற்றி விழாவை நடத்தவுள்ளது. இராணுவ வீரர் நினைவு தினம் என்ற பாணியில் கண்டியில் இதற்கான பிரமாண்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை மே மாதம் 19 ஆம் திகதி போர் வெற்றி விழா கொண்டாடப்பட்டுவந்தது.

 

 

கருத்து தெரிவிக்க