இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, அமரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு அமரிக்க ராஜாங்க திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அமரிக்காவில் நடைபெறும் உயர்மட்ட மாநாட்டுக்காக திலக் மாரப்பன அங்கு சென்றுள்ளார்.
ந்தநிலையில் அமரிக்க ராஜாங்க செயலாளருடனான சந்திப்பின்போது, திலக் மாரப்பன உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் பயங்கராத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
எனினும் இதன்போது அமரிக்க தரப்பினால் கூறப்பட்ட விடயங்கள் எவையும் வெளியாகவில்லை.
இதேவேளை திலக் மாரப்பன தலைமையிலான குழுவினரும் அமரிக்க அதிகாரிகளும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து அமைச்சர் மாரப்பன மெக்சிக்கோவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கருத்து தெரிவிக்க