அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மனசாட்சியின் பிரகாரமே வாக்களிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
” பிரேரணையின் உள்ளடக்கங்கள் எவை என்பன குறித்து எமக்கு தற்போது எதுவும் தெரியாது. அவை பற்றி கற்றறியவேண்டும். அதன்பின்னர் மக்களிடமும், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் ஆலோசனை பெறுவோம். கட்சி தலைமையுடனும் கலந்துரையாடி மனசாட்சியின் பிரகாரமே வாக்களிப்போம்.
இதுவிடயத்தில் கட்சி எடுக்கும் தீர்மானத்துக்கு கட்டுப்படமுடியாத சூழ்நிலையே ஏற்படும். அரசியல் என்பதற்கு அப்பால் மக்களும், மனசாட்சியும் எமக்கு முக்கியம்.” என்றும் அவர்கள் கூறினர்.
அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க